குர்ஆன் 8:52 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
இது ஃபேரோவின் சமூகத்தவருக்கும், மேலும் அவர்களுக்கு முன்பு நம்ப மறுத்தவர்களுக்கும் நேர்ந்த அதே கதியைப் போன்றதேயாகும். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் கடவுள் அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார். கடவுள் சக்தி மிக்கவர், மேலும் அவருடைய தண்டனை கடுமையானது.
[8:51] “இது உங்களுடைய கரங்கள் முற்படுத்தி அனுப்பியவற்றின் பின் விளைவுகள் ஆகும். படைப்பினங்களின் பால் கடவுள் ஒரு போதும் அநீதியானவர் அல்ல”.
[8:53] தங்களுக்குத் தாங்களே மாற்றிக் கொண்டு விட முடிவெடுத்தாலன்றி, எந்த மக்களுக்கும் தான் அருளிய ஓர் அருட்கொடையினை கடவுள் மாற்றுவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.