குர்ஆன் 8:53 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
தங்களுக்குத் தாங்களே மாற்றிக் கொண்டு விட முடிவெடுத்தாலன்றி, எந்த மக்களுக்கும் தான் அருளிய ஓர் அருட்கொடையினை கடவுள் மாற்றுவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[8:52] இது ஃபேரோவின் சமூகத்தவருக்கும், மேலும் அவர்களுக்கு முன்பு நம்ப மறுத்தவர்களுக்கும் நேர்ந்த அதே கதியைப் போன்றதேயாகும். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் கடவுள் அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார். கடவுள் சக்தி மிக்கவர், மேலும் அவருடைய தண்டனை கடுமையானது.
[8:54] இத்தகைய நிலைதான் ஃபேரோவின் சமூகத் தவரிடமும், மேலும் அவர்களுக்கு முன்பிருந்த மற்றவர்களிடமும் இருந்தது. முதலில் அவர்கள் தங்கள் இரட்சகரின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை நாம் அழித் தோம். ஃபேரோவின் சமூகத்தினரை மூழ்கடித் தோம்; தீயவர்கள் தொடர்ந்து தண்டிக்கப் பட்டே வருகின்றனர்.