குர்ஆன் 8:55 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
கடவுள்-ன் பார்வையில் மிக மோசமான படைப்பினங்கள் நம்ப மறுத்தவர்கள் தான். அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.
[8:54] இத்தகைய நிலைதான் ஃபேரோவின் சமூகத் தவரிடமும், மேலும் அவர்களுக்கு முன்பிருந்த மற்றவர்களிடமும் இருந்தது. முதலில் அவர்கள் தங்கள் இரட்சகரின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை நாம் அழித் தோம். ஃபேரோவின் சமூகத்தினரை மூழ்கடித் தோம்; தீயவர்கள் தொடர்ந்து தண்டிக்கப் பட்டே வருகின்றனர்.
[8:56] நீர் அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்கின்றீர், ஆனால் அவர்களோ ஒவ் வொரு தடவையும் தங்களின் உடன்படிக்கை களை மீறுகின்றார்கள்; அவர்கள் நன்னெறி யாளர்கள் அல்ல.