குர்ஆன் 8:64 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
வேதம் வழங்கப்பட்டவரே, கடவுள் மற்றும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்கள் உமக்கு போதுமானவர்கள்.
[8:63] (நம்பிக்கையாளர்களின்) இதயங்களை அவர் இணக்கமாக்கி வைத்தார். பூமியில் உள்ள அனைத்து செல்வத்தையும் நீர் செலவிட்டிருந் தாலும், அவர்களுடைய இதயங்களை நீர் இணக்கப்படுத்த முடிந்திருக்காது. ஆனால் கடவுள் அவர்களை இணக்கப்படுத்தினார். அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:65] வேதம் வழங்கப்பட்டவரே, நம்பிக்கையாளர்கள் போரிடுவதற்கு நீர் உபதேசிக்க வேண்டும். உறுதியுடையோராய் இருபது பேர் உங்களில் இருந்தால் அவர்கள் இருநூறு பேரை தோற்கடிக்க இயலும். மேலும் உங்களில் உள்ள ஒரு நூறு பேர் நம்பிக்கை கொள்ள மறுத்த ஓர் ஆயிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே அதற்கு காரணமாகும்.