Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:65 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

يٰأَيُّهَا النَّبِىُّ حَرِّضِ المُؤمِنينَ عَلَى القِتالِ ۚ إِن يَكُن مِنكُم عِشرونَ صٰبِرونَ يَغلِبوا مِا۟ئَتَينِ ۚ وَإِن يَكُن مِنكُم مِا۟ئَةٌ يَغلِبوا أَلفًا مِنَ الَّذينَ كَفَروا بِأَنَّهُم قَومٌ لا يَفقَهونَ

வேதம் வழங்கப்பட்டவரே, நம்பிக்கையாளர்கள் போரிடுவதற்கு நீர் உபதேசிக்க வேண்டும். உறுதியுடையோராய் இருபது பேர் உங்களில் இருந்தால் அவர்கள் இருநூறு பேரை தோற்கடிக்க இயலும். மேலும் உங்களில் உள்ள ஒரு நூறு பேர் நம்பிக்கை கொள்ள மறுத்த ஓர் ஆயிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே அதற்கு காரணமாகும்.

[8:64] வேதம் வழங்கப்பட்டவரே, கடவுள் மற்றும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்கள் உமக்கு போதுமானவர்கள்.

[8:66] இப்போது (புதியவர்கள் அதிகமானோர் உம்முடன் சேர்ந்திருப்பதால்) கடவுள் அதை உமக்கு எளிதாக ஆக்கியுள்ளார், ஏனெனில் முன்னர் இருந்த அதே பலத்துடன் இப்போது நீங்கள் இல்லையென்பது அவருக்குத் தெரியும். இனிமேல், உறுதியுடையவர்களான ஒரு நூறு நம்பிக்கையாளர்கள் இருநூறு பேரைத் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களின் ஓர் ஆயிரம் பேர் கடவுள் அனுமதியால் இரண்டா யிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.