குர்ஆன் 8:66 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
இப்போது (புதியவர்கள் அதிகமானோர் உம்முடன் சேர்ந்திருப்பதால்) கடவுள் அதை உமக்கு எளிதாக ஆக்கியுள்ளார், ஏனெனில் முன்னர் இருந்த அதே பலத்துடன் இப்போது நீங்கள் இல்லையென்பது அவருக்குத் தெரியும். இனிமேல், உறுதியுடையவர்களான ஒரு நூறு நம்பிக்கையாளர்கள் இருநூறு பேரைத் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களின் ஓர் ஆயிரம் பேர் கடவுள் அனுமதியால் இரண்டா யிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.
[8:65] வேதம் வழங்கப்பட்டவரே, நம்பிக்கையாளர்கள் போரிடுவதற்கு நீர் உபதேசிக்க வேண்டும். உறுதியுடையோராய் இருபது பேர் உங்களில் இருந்தால் அவர்கள் இருநூறு பேரை தோற்கடிக்க இயலும். மேலும் உங்களில் உள்ள ஒரு நூறு பேர் நம்பிக்கை கொள்ள மறுத்த ஓர் ஆயிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே அதற்கு காரணமாகும்.
[8:67] வேதம் வழங்கப்பட்டவர் எவரும் அவர் போரில் பங்கெடுத்தால் அன்றி கைதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. மக்களாகிய நீங்கள் இவ்வுலகின் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், அதே சமயம் கடவுள் மறுவுலகின் வாழ்வை ஆதரிக்கின்றார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.