Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:67 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

ما كانَ لِنَبِىٍّ أَن يَكونَ لَهُ أَسرىٰ حَتّىٰ يُثخِنَ فِى الأَرضِ ۚ تُريدونَ عَرَضَ الدُّنيا وَاللَّهُ يُريدُ الءاخِرَةَ ۗ وَاللَّهُ عَزيزٌ حَكيمٌ

வேதம் வழங்கப்பட்டவர் எவரும் அவர் போரில் பங்கெடுத்தால் அன்றி கைதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. மக்களாகிய நீங்கள் இவ்வுலகின் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், அதே சமயம் கடவுள் மறுவுலகின் வாழ்வை ஆதரிக்கின்றார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[8:66] இப்போது (புதியவர்கள் அதிகமானோர் உம்முடன் சேர்ந்திருப்பதால்) கடவுள் அதை உமக்கு எளிதாக ஆக்கியுள்ளார், ஏனெனில் முன்னர் இருந்த அதே பலத்துடன் இப்போது நீங்கள் இல்லையென்பது அவருக்குத் தெரியும். இனிமேல், உறுதியுடையவர்களான ஒரு நூறு நம்பிக்கையாளர்கள் இருநூறு பேரைத் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களின் ஓர் ஆயிரம் பேர் கடவுள் அனுமதியால் இரண்டா யிரம் பேரைத் தோற்கடிக்க இயலும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

[8:68] கடவுள்-இடமிருந்து முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒரு தீர்ப்பு மட்டும் இல்லாதிருந்தால், நீங்கள் எதனை எடுத்துக் கொண்டீர்களோ, அதன் பொருட்டு ஒரு பயங்கரமான தண்டனை யை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.