Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:63 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

(நம்பிக்கையாளர்களின்) இதயங்களை அவர் இணக்கமாக்கி வைத்தார். பூமியில் உள்ள அனைத்து செல்வத்தையும் நீர் செலவிட்டிருந் தாலும், அவர்களுடைய இதயங்களை நீர் இணக்கப்படுத்த முடிந்திருக்காது. ஆனால் கடவுள் அவர்களை இணக்கப்படுத்தினார். அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[8:62] அவர்கள் உம்மை ஏமாற்றக் கருதினால், அப்போது கடவுள் உமக்குப் போதுமானவராக இருப்பார். அவர் தனது ஆதரவைக் கொண் டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உமக்கு உதவி புரிவார்.

[8:64] வேதம் வழங்கப்பட்டவரே, கடவுள் மற்றும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்கள் உமக்கு போதுமானவர்கள்.