குர்ஆன் 8:69 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
ஆகையால், போரில் கைப்பற்றிய பொருட்களி லிருந்து நீங்கள் சம்பாதித்ததில் அனுமதிக்கப் பட்டதும் மேலும் நல்லதுமானதை உண்ணுங் கள், மேலும் கடவுள்-ஐ கவனத்தில் கொள் ளுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[8:68] கடவுள்-இடமிருந்து முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒரு தீர்ப்பு மட்டும் இல்லாதிருந்தால், நீங்கள் எதனை எடுத்துக் கொண்டீர்களோ, அதன் பொருட்டு ஒரு பயங்கரமான தண்டனை யை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.
[8:70] வேதம் வழங்கப்பட்டவரே, உம்கைவசம் உள்ள போர்க்கைதிகளிடம், “ உங்கள் இதயங்களில் நல்லது எதையும், கடவுள் அறிந்திருந்தால் நீங்கள் இழந்து விட்ட எதையும் விட சிறந்ததை அவர் உங்களுக்குக் கொடுத்திருப்பார், மேலும் உங்களை மன்னித்துமிருப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று சொல்வீராக.