குர்ஆன் 9:100 — இறுதியான எச்சரிக்கை
وَالسّٰبِقونَ الأَوَّلونَ مِنَ المُهٰجِرينَ وَالأَنصارِ وَالَّذينَ اتَّبَعوهُم بِإِحسٰنٍ رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ وَأَعَدَّ لَهُم جَنّٰتٍ تَجرى تَحتَهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا ۚ ذٰلِكَ الفَوزُ العَظيمُ
ஊரைத் துறந்து வெளியேறிய ஆரம்பகால முன்னோடிகளையும் (முஹாஜிரீன்), மேலும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஆதரவாளர் களையும் (அன்சார்), மேலும் நன்னெறியில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பொறுத்த வரை, கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தனர். அவர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை அவர் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.
[9:99] மற்ற அரேபியர்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், மேலும் அவர்கள் செலவிடு வதை கடவுள் -ஐ நோக்கிய ஒரு சாதனமாக வும் தூதருக்கு ஆதரவளிக்கும் ஓர் உபாயமாக வும், கருதுகின்றனர். உண்மையில், அது அவர்களை மிக அருகில் கொண்டு வரவே செய்யும். கடவுள் தனது கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:101] உங்களைச் சுற்றியுள்ள அரேபியர்களில், நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். இன்னும், நகரவாசிகளிலும், நயவஞ்சகத்திற்குப் பழகிப் போனவர்கள் இருக்கின்றனர். அவர்களை உமக்குத் தெரியாது, ஆனால் நமக்கு அவர் களைத் தெரியும். அவர்களுக்கு தண்டனை யை நாம் இருமடங்காக்குவோம், அதன் பின்னர், இறுதியில் அவர்கள் பயங்கரமான தண்டனையில் போடப்பட்டவர்களாகி விடுவார்கள்.