குர்ஆன் 9:101 — இறுதியான எச்சரிக்கை
உங்களைச் சுற்றியுள்ள அரேபியர்களில், நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். இன்னும், நகரவாசிகளிலும், நயவஞ்சகத்திற்குப் பழகிப் போனவர்கள் இருக்கின்றனர். அவர்களை உமக்குத் தெரியாது, ஆனால் நமக்கு அவர் களைத் தெரியும். அவர்களுக்கு தண்டனை யை நாம் இருமடங்காக்குவோம், அதன் பின்னர், இறுதியில் அவர்கள் பயங்கரமான தண்டனையில் போடப்பட்டவர்களாகி விடுவார்கள்.
[9:100] ஊரைத் துறந்து வெளியேறிய ஆரம்பகால முன்னோடிகளையும் (முஹாஜிரீன்), மேலும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஆதரவாளர் களையும் (அன்சார்), மேலும் நன்னெறியில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பொறுத்த வரை, கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தனர். அவர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை அவர் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.
[9:102] தங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளும் மற்றவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் நல்ல செயல்களுடன் கெட்ட செயல்களைக் கலந்து விட்டனர். கடவுள் அவர்களை மீட்டுக் கொள் வார். ஏனெனில் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.