Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:102 — இறுதியான எச்சரிக்கை

தங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளும் மற்றவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் நல்ல செயல்களுடன் கெட்ட செயல்களைக் கலந்து விட்டனர். கடவுள் அவர்களை மீட்டுக் கொள் வார். ஏனெனில் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[9:101] உங்களைச் சுற்றியுள்ள அரேபியர்களில், நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். இன்னும், நகரவாசிகளிலும், நயவஞ்சகத்திற்குப் பழகிப் போனவர்கள் இருக்கின்றனர். அவர்களை உமக்குத் தெரியாது, ஆனால் நமக்கு அவர் களைத் தெரியும். அவர்களுக்கு தண்டனை யை நாம் இருமடங்காக்குவோம், அதன் பின்னர், இறுதியில் அவர்கள் பயங்கரமான தண்டனையில் போடப்பட்டவர்களாகி விடுவார்கள்.

[9:103] அவர்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், மேலும் அவர்களைப் புனிதப்படுத்துவதற் காகவும், அவர்களுடைய செல்வத்திலிருந்து ஒரு தர்மத்தை ஏற்றுக்கொள்வீராக. மேலும் அவர்களை ஊக்கப்படுத்துவீராக, ஏனெனில் உமது ஊக்கம் அவர்களுக்கு மறுவுறுதியைத் தரும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந் தவர்.