Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:103 — இறுதியான எச்சரிக்கை

அவர்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், மேலும் அவர்களைப் புனிதப்படுத்துவதற் காகவும், அவர்களுடைய செல்வத்திலிருந்து ஒரு தர்மத்தை ஏற்றுக்கொள்வீராக. மேலும் அவர்களை ஊக்கப்படுத்துவீராக, ஏனெனில் உமது ஊக்கம் அவர்களுக்கு மறுவுறுதியைத் தரும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந் தவர்.

[9:102] தங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளும் மற்றவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் நல்ல செயல்களுடன் கெட்ட செயல்களைக் கலந்து விட்டனர். கடவுள் அவர்களை மீட்டுக் கொள் வார். ஏனெனில் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[9:104] கடவுள், தன்னை வழிபடுவர்களின் வருந்தித் திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் தர்மங்களை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் கடவுள் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணை யாளர் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லையா?