குர்ஆன் 9:99 — இறுதியான எச்சரிக்கை
மற்ற அரேபியர்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், மேலும் அவர்கள் செலவிடு வதை கடவுள் -ஐ நோக்கிய ஒரு சாதனமாக வும் தூதருக்கு ஆதரவளிக்கும் ஓர் உபாயமாக வும், கருதுகின்றனர். உண்மையில், அது அவர்களை மிக அருகில் கொண்டு வரவே செய்யும். கடவுள் தனது கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:98] சில அரேபியர்கள் (கடவுளுக்காக) அவர்கள் செலவிடுவதை ஒரு நஷ்டம் எனக் கருது கின்றனர், மேலும் ஒரு பேரழிவு உங்களைத் தாக்கக்கூடும் என்று எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் தான் மிகமோசமான பேரழிவிற்கு உள்ளாவார்கள். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[9:100] ஊரைத் துறந்து வெளியேறிய ஆரம்பகால முன்னோடிகளையும் (முஹாஜிரீன்), மேலும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஆதரவாளர் களையும் (அன்சார்), மேலும் நன்னெறியில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பொறுத்த வரை, கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தனர். அவர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை அவர் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.