குர்ஆன் 9:98 — இறுதியான எச்சரிக்கை
சில அரேபியர்கள் (கடவுளுக்காக) அவர்கள் செலவிடுவதை ஒரு நஷ்டம் எனக் கருது கின்றனர், மேலும் ஒரு பேரழிவு உங்களைத் தாக்கக்கூடும் என்று எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் தான் மிகமோசமான பேரழிவிற்கு உள்ளாவார்கள். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[9:97] அரேபியர்கள் நம்பிக்கையின்மையிலும், நயவஞ்சகத்தனத்திலும் மிகவும் மோசமான வர்கள், மேலும் கடவுள் தன் தூதருக்கு வெளிப்படுத்தி இருக்கின்ற சட்டங்களை மிகவும் அலட்சியம் செய்யக்கூடியவர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:99] மற்ற அரேபியர்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், மேலும் அவர்கள் செலவிடு வதை கடவுள் -ஐ நோக்கிய ஒரு சாதனமாக வும் தூதருக்கு ஆதரவளிக்கும் ஓர் உபாயமாக வும், கருதுகின்றனர். உண்மையில், அது அவர்களை மிக அருகில் கொண்டு வரவே செய்யும். கடவுள் தனது கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.