குர்ஆன் 9:97 — இறுதியான எச்சரிக்கை
அரேபியர்கள் நம்பிக்கையின்மையிலும், நயவஞ்சகத்தனத்திலும் மிகவும் மோசமான வர்கள், மேலும் கடவுள் தன் தூதருக்கு வெளிப்படுத்தி இருக்கின்ற சட்டங்களை மிகவும் அலட்சியம் செய்யக்கூடியவர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:96] அவர்களை நீர் மன்னித்து விடும் பொருட்டு, அவர்கள் உம்மிடம் சத்தியம் செய்கின்றனர். நீர் அவர்களை மன்னித்தாலும், கடவுள் இத்தகைய தீய மக்களை மன்னிக்க மாட்டார்.
[9:98] சில அரேபியர்கள் (கடவுளுக்காக) அவர்கள் செலவிடுவதை ஒரு நஷ்டம் எனக் கருது கின்றனர், மேலும் ஒரு பேரழிவு உங்களைத் தாக்கக்கூடும் என்று எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் தான் மிகமோசமான பேரழிவிற்கு உள்ளாவார்கள். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.