குர்ஆன் 9:96 — இறுதியான எச்சரிக்கை
அவர்களை நீர் மன்னித்து விடும் பொருட்டு, அவர்கள் உம்மிடம் சத்தியம் செய்கின்றனர். நீர் அவர்களை மன்னித்தாலும், கடவுள் இத்தகைய தீய மக்களை மன்னிக்க மாட்டார்.
[9:95] அவர்களிடம் நீர் திரும்பி வரும் போது, அவர் களை நீர் புறக்கணித்து விடக்கூடும் என்பதற் காக, அவர்கள் உம்மிடம் கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்கள் அசுத்தமானவர்கள், மேலும் அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்குப் பிரதிபலனாக, நரகம்தான் அவர்களுடைய விதியாகும்.
[9:97] அரேபியர்கள் நம்பிக்கையின்மையிலும், நயவஞ்சகத்தனத்திலும் மிகவும் மோசமான வர்கள், மேலும் கடவுள் தன் தூதருக்கு வெளிப்படுத்தி இருக்கின்ற சட்டங்களை மிகவும் அலட்சியம் செய்யக்கூடியவர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.