குர்ஆன் 9:95 — இறுதியான எச்சரிக்கை
அவர்களிடம் நீர் திரும்பி வரும் போது, அவர் களை நீர் புறக்கணித்து விடக்கூடும் என்பதற் காக, அவர்கள் உம்மிடம் கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்கள் அசுத்தமானவர்கள், மேலும் அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்குப் பிரதிபலனாக, நரகம்தான் அவர்களுடைய விதியாகும்.
[9:94] (போரில் இருந்து) அவர்களிடம் நீர் திரும்பி வரும்போது அவர்கள் உம்மிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர். “வருத்தம் தெரிவிக்க வேண்டாம்; இதற்கு மேலும் நாங்கள் உங்களை நம்ப மாட்டோம். கடவுள் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்து விட்டார்” என்று கூறுவீராக. கடவுள் உங்களுடைய செயல்களைப் பார்ப்பார், மேலும் தூதரும் அவ்வாறே செய்வார், பின்னர் எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அதன் பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.
[9:96] அவர்களை நீர் மன்னித்து விடும் பொருட்டு, அவர்கள் உம்மிடம் சத்தியம் செய்கின்றனர். நீர் அவர்களை மன்னித்தாலும், கடவுள் இத்தகைய தீய மக்களை மன்னிக்க மாட்டார்.