குர்ஆன் 9:94 — இறுதியான எச்சரிக்கை
(போரில் இருந்து) அவர்களிடம் நீர் திரும்பி வரும்போது அவர்கள் உம்மிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர். “வருத்தம் தெரிவிக்க வேண்டாம்; இதற்கு மேலும் நாங்கள் உங்களை நம்ப மாட்டோம். கடவுள் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்து விட்டார்” என்று கூறுவீராக. கடவுள் உங்களுடைய செயல்களைப் பார்ப்பார், மேலும் தூதரும் அவ்வாறே செய்வார், பின்னர் எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அதன் பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.
[9:93] தங்களுக்கு ஒரு காரணமும் இல்லாமல் இருந்த போதிலும், பின் தங்கிக் கொள்ள உம்மிடம் அனுமதி கேட்கின்றவர்கள் மீது தான் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களோடு, இருந்து கொள்வதை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட்டார், மேலும் இவ்விதமாக, அவர்கள் எந்த அறிவையும் அடைவதில்லை.
[9:95] அவர்களிடம் நீர் திரும்பி வரும் போது, அவர் களை நீர் புறக்கணித்து விடக்கூடும் என்பதற் காக, அவர்கள் உம்மிடம் கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்கள் அசுத்தமானவர்கள், மேலும் அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்குப் பிரதிபலனாக, நரகம்தான் அவர்களுடைய விதியாகும்.