குர்ஆன் 9:93 — இறுதியான எச்சரிக்கை
தங்களுக்கு ஒரு காரணமும் இல்லாமல் இருந்த போதிலும், பின் தங்கிக் கொள்ள உம்மிடம் அனுமதி கேட்கின்றவர்கள் மீது தான் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களோடு, இருந்து கொள்வதை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட்டார், மேலும் இவ்விதமாக, அவர்கள் எந்த அறிவையும் அடைவதில்லை.
[9:92] உங்களோடு சேர்ந்து கொள்ள விரும்பியவர் களாக உம்மிடம் வந்து, ஆனால் நீர் அவர் களிடம், “உங்களைச் சுமந்து செல்ல என்னிடம் எதுவும் இல்லை” என்று கூறினீரே, அவர்களும் மன்னிக்கப்பட்டு விட்டனர். பங்களிப்புக் கொடுப்பதற்கு தங்களால் இயலவில்லையே என்று மெய்யாகவே துக்கமடைந்தவர்களாக, தங்களுடைய கண்களில் கண்ணீரோடு பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
[9:94] (போரில் இருந்து) அவர்களிடம் நீர் திரும்பி வரும்போது அவர்கள் உம்மிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர். “வருத்தம் தெரிவிக்க வேண்டாம்; இதற்கு மேலும் நாங்கள் உங்களை நம்ப மாட்டோம். கடவுள் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்து விட்டார்” என்று கூறுவீராக. கடவுள் உங்களுடைய செயல்களைப் பார்ப்பார், மேலும் தூதரும் அவ்வாறே செய்வார், பின்னர் எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அதன் பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.