குர்ஆன் 9:92 — இறுதியான எச்சரிக்கை
உங்களோடு சேர்ந்து கொள்ள விரும்பியவர் களாக உம்மிடம் வந்து, ஆனால் நீர் அவர் களிடம், “உங்களைச் சுமந்து செல்ல என்னிடம் எதுவும் இல்லை” என்று கூறினீரே, அவர்களும் மன்னிக்கப்பட்டு விட்டனர். பங்களிப்புக் கொடுப்பதற்கு தங்களால் இயலவில்லையே என்று மெய்யாகவே துக்கமடைந்தவர்களாக, தங்களுடைய கண்களில் கண்ணீரோடு பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
[9:91] பலஹீனர்கள், அல்லது நோயாளிகள், அல்லது கொடுப்பதற்கு எதனையும் காணாதவர்கள், கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் அர்ப்பணித்தவர்களாக அவர்கள் இருக்கும் வரை, குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். அவர்களில் உள்ள நன்னெறியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்படக் கூடாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:93] தங்களுக்கு ஒரு காரணமும் இல்லாமல் இருந்த போதிலும், பின் தங்கிக் கொள்ள உம்மிடம் அனுமதி கேட்கின்றவர்கள் மீது தான் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களோடு, இருந்து கொள்வதை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட்டார், மேலும் இவ்விதமாக, அவர்கள் எந்த அறிவையும் அடைவதில்லை.