குர்ஆன் 9:91 — இறுதியான எச்சரிக்கை
பலஹீனர்கள், அல்லது நோயாளிகள், அல்லது கொடுப்பதற்கு எதனையும் காணாதவர்கள், கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் அர்ப்பணித்தவர்களாக அவர்கள் இருக்கும் வரை, குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். அவர்களில் உள்ள நன்னெறியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்படக் கூடாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:90] அரேபியர்கள் சாக்குப் போக்குகளை உருவாக் கிக் கொண்டு, பின் தங்கிக் கொள்ள அனுமதி தேடியவர்களாக உம்மிடம் வந்தனர். இது, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததைச் சுட்டிக் காட்டுகின்றது-அவர்கள் பின்தங்குகின்றனர். உண்மையில், அவர்களில் உள்ள நம்ப மறுப்போர் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[9:92] உங்களோடு சேர்ந்து கொள்ள விரும்பியவர் களாக உம்மிடம் வந்து, ஆனால் நீர் அவர் களிடம், “உங்களைச் சுமந்து செல்ல என்னிடம் எதுவும் இல்லை” என்று கூறினீரே, அவர்களும் மன்னிக்கப்பட்டு விட்டனர். பங்களிப்புக் கொடுப்பதற்கு தங்களால் இயலவில்லையே என்று மெய்யாகவே துக்கமடைந்தவர்களாக, தங்களுடைய கண்களில் கண்ணீரோடு பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர்.