Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:90 — இறுதியான எச்சரிக்கை

அரேபியர்கள் சாக்குப் போக்குகளை உருவாக் கிக் கொண்டு, பின் தங்கிக் கொள்ள அனுமதி தேடியவர்களாக உம்மிடம் வந்தனர். இது, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததைச் சுட்டிக் காட்டுகின்றது-அவர்கள் பின்தங்குகின்றனர். உண்மையில், அவர்களில் உள்ள நம்ப மறுப்போர் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[9:89] கடவுள் அவர்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைத் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.

[9:91] பலஹீனர்கள், அல்லது நோயாளிகள், அல்லது கொடுப்பதற்கு எதனையும் காணாதவர்கள், கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் அர்ப்பணித்தவர்களாக அவர்கள் இருக்கும் வரை, குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். அவர்களில் உள்ள நன்னெறியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்படக் கூடாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.