குர்ஆன் 9:89 — இறுதியான எச்சரிக்கை
கடவுள் அவர்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைத் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.
[9:88] தூதரையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர் களையும் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் செல்வத்தையும், தங்கள் வாழ்வுகளையும் கொண்டு ஆர்வத்துடன் பாடுபடுவார்கள். இவர்கள் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவர்களாகி விட்டார்கள்; இவர்களே வெற்றி பெற்றவர்கள்.
[9:90] அரேபியர்கள் சாக்குப் போக்குகளை உருவாக் கிக் கொண்டு, பின் தங்கிக் கொள்ள அனுமதி தேடியவர்களாக உம்மிடம் வந்தனர். இது, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததைச் சுட்டிக் காட்டுகின்றது-அவர்கள் பின்தங்குகின்றனர். உண்மையில், அவர்களில் உள்ள நம்ப மறுப்போர் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.