குர்ஆன் 9:88 — இறுதியான எச்சரிக்கை
தூதரையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர் களையும் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் செல்வத்தையும், தங்கள் வாழ்வுகளையும் கொண்டு ஆர்வத்துடன் பாடுபடுவார்கள். இவர்கள் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவர்களாகி விட்டார்கள்; இவர்களே வெற்றி பெற்றவர்கள்.
[9:87] அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களுடன் சேர்ந்திருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண் டனர். அதன் விளைவாக, அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டன. எனவே, அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
[9:89] கடவுள் அவர்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைத் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.