குர்ஆன் 9:107 — இறுதியான எச்சரிக்கை
இணைத் தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் மஸ்ஜிதுகளை துஷ்பிரயோகம் செய்து, நம்பிக்கையாளர் களைப் பிளவுபடுத்தி, மேலும் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்களுக்கு வசதி செய்து தருபவர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்திபூர்வமாக:“எங்கள் நோக்கங்கள் தூய்மையானவை!” என்று சத்தியம் செய் கின்றனர்: அவர்கள் பொய்யர்கள் என்று கடவுள் சாட்சியம் அளிக்கின்றார்.
[9:106] மற்றவர்கள் கடவுள்-ன் தீர்மானத்திற்காகக் காத்திருக்கின்றனர்; அவர்களை அவர் தண்டிக்கலாம், அல்லது அவர்களை அவர் மீட்டுக் கொள்ளலாம். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:108] அத்தகையதொரு மஸ்ஜிதில் நீர் ஒரு போதும் தொழவேண்டாம். முதல் நாளிலிருந்தே நன்னெறியின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதொரு மஸ்ஜித் எதுவோ, அதுதான் உமது தொழுகைக்கு மிகவும் தகுதியானது. அதனுள் தூய்மைப்படுத்தப்படுவதை விரும்பும் மக்கள் இருக்கின்றனர். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ள விரும்புபவர்களையே கடவுள் நேசிக்கின்றார்.