குர்ஆன் 9:108 — இறுதியான எச்சரிக்கை
لا تَقُم فيهِ أَبَدًا ۚ لَمَسجِدٌ أُسِّسَ عَلَى التَّقوىٰ مِن أَوَّلِ يَومٍ أَحَقُّ أَن تَقومَ فيهِ ۚ فيهِ رِجالٌ يُحِبّونَ أَن يَتَطَهَّروا ۚ وَاللَّهُ يُحِبُّ المُطَّهِّرينَ
அத்தகையதொரு மஸ்ஜிதில் நீர் ஒரு போதும் தொழவேண்டாம். முதல் நாளிலிருந்தே நன்னெறியின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதொரு மஸ்ஜித் எதுவோ, அதுதான் உமது தொழுகைக்கு மிகவும் தகுதியானது. அதனுள் தூய்மைப்படுத்தப்படுவதை விரும்பும் மக்கள் இருக்கின்றனர். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ள விரும்புபவர்களையே கடவுள் நேசிக்கின்றார்.
[9:107] இணைத் தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் மஸ்ஜிதுகளை துஷ்பிரயோகம் செய்து, நம்பிக்கையாளர் களைப் பிளவுபடுத்தி, மேலும் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்களுக்கு வசதி செய்து தருபவர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்திபூர்வமாக:“எங்கள் நோக்கங்கள் தூய்மையானவை!” என்று சத்தியம் செய் கின்றனர்: அவர்கள் பொய்யர்கள் என்று கடவுள் சாட்சியம் அளிக்கின்றார்.
[9:109] சிறந்தவர், தனது கட்டடத்தை கடவுள் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிலும், அவருடைய திருப்தியைப் பெறுவதற்காகவும் நிர்மாணிக்கின்ற ஒருவரா, அல்லது தன்னுடன் சேர்ந்து நரக நெருப்பில் விழுந்து விடக் கூடியவாறு, நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான மலையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணிக்கின்ற ஒருவனா? வரம்பு மீறுகின்ற மக்களை கடவுள் வழிநடத்துவதில்லை.