Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:109 — இறுதியான எச்சரிக்கை

சிறந்தவர், தனது கட்டடத்தை கடவுள் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிலும், அவருடைய திருப்தியைப் பெறுவதற்காகவும் நிர்மாணிக்கின்ற ஒருவரா, அல்லது தன்னுடன் சேர்ந்து நரக நெருப்பில் விழுந்து விடக் கூடியவாறு, நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான மலையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணிக்கின்ற ஒருவனா? வரம்பு மீறுகின்ற மக்களை கடவுள் வழிநடத்துவதில்லை.

[9:108] அத்தகையதொரு மஸ்ஜிதில் நீர் ஒரு போதும் தொழவேண்டாம். முதல் நாளிலிருந்தே நன்னெறியின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதொரு மஸ்ஜித் எதுவோ, அதுதான் உமது தொழுகைக்கு மிகவும் தகுதியானது. அதனுள் தூய்மைப்படுத்தப்படுவதை விரும்பும் மக்கள் இருக்கின்றனர். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ள விரும்புபவர்களையே கடவுள் நேசிக்கின்றார்.

[9:110] அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய தொரு கட்டடம் அவர்களுடைய இதயங்கள் அசைவற்றதாகி விடும்வரை, அவர்களுடைய இதயங்களில் சந்தேகத்திற்கானதொரு மூலா தாரமாக தொடர்ந்து இருக்கின்றது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.