Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:110 — இறுதியான எச்சரிக்கை

அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய தொரு கட்டடம் அவர்களுடைய இதயங்கள் அசைவற்றதாகி விடும்வரை, அவர்களுடைய இதயங்களில் சந்தேகத்திற்கானதொரு மூலா தாரமாக தொடர்ந்து இருக்கின்றது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[9:109] சிறந்தவர், தனது கட்டடத்தை கடவுள் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிலும், அவருடைய திருப்தியைப் பெறுவதற்காகவும் நிர்மாணிக்கின்ற ஒருவரா, அல்லது தன்னுடன் சேர்ந்து நரக நெருப்பில் விழுந்து விடக் கூடியவாறு, நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான மலையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணிக்கின்ற ஒருவனா? வரம்பு மீறுகின்ற மக்களை கடவுள் வழிநடத்துவதில்லை.

[9:111] நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய வாழ்வுகளையும் மேலும் அவர்களுடைய செல்வங்களையும் சுவனத்திற்குப் பகரமாக, கடவுள் விலைக்கு வாங்கிக் கொண்டார். இவ்வாறாக, அவர்கள் கடவுள்-க்காக சண்டை யிடுவார்கள், கொல்வதற்கு விரும்புவார்கள், மேலும் கொல்லப்படுவார்கள். தோராவிலும், சுவிஷேசத்திலும் மற்றும் இந்தக் குர்ஆனிலும் அவருடைய சத்திய வாக்குறுதி இத்தகையதே-மேலும் தனது வாக்குறுதியை கடவுள்-ஐ விடச் சிறந்த முறையில் நிறை வேற்றுபவர் வேறு யார்? இத்தகையதொரு பரிமாற்றத்தைச் செய்து கொள் வதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.