குர்ஆன் 9:111 — இறுதியான எச்சரிக்கை
நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய வாழ்வுகளையும் மேலும் அவர்களுடைய செல்வங்களையும் சுவனத்திற்குப் பகரமாக, கடவுள் விலைக்கு வாங்கிக் கொண்டார். இவ்வாறாக, அவர்கள் கடவுள்-க்காக சண்டை யிடுவார்கள், கொல்வதற்கு விரும்புவார்கள், மேலும் கொல்லப்படுவார்கள். தோராவிலும், சுவிஷேசத்திலும் மற்றும் இந்தக் குர்ஆனிலும் அவருடைய சத்திய வாக்குறுதி இத்தகையதே-மேலும் தனது வாக்குறுதியை கடவுள்-ஐ விடச் சிறந்த முறையில் நிறை வேற்றுபவர் வேறு யார்? இத்தகையதொரு பரிமாற்றத்தைச் செய்து கொள் வதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[9:110] அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய தொரு கட்டடம் அவர்களுடைய இதயங்கள் அசைவற்றதாகி விடும்வரை, அவர்களுடைய இதயங்களில் சந்தேகத்திற்கானதொரு மூலா தாரமாக தொடர்ந்து இருக்கின்றது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:112] அவர்கள் வருந்தித்திருந்துபவர்கள், வழிபாடு செய்பவர்கள், புகழ்பவர்கள், தியானம் செய் பவர்கள், குனிபவர்கள் மற்றும் சிரம் பணிபவர்கள், நன்னெறியை ஆதரிப்பவர்கள், மேலும் தீமையைத் தடுப்பவர்கள், மேலும் கடவுள்-ன் சட்டங்களைப் பாதுகாப்பவர்கள். இத்தகைய நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுவீ ராக.