Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:116 — இறுதியான எச்சரிக்கை

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. அவர் வாழ்வையும் மரணத் தையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள்-ஐத் தவிர உங்களுக்கு ஓர் இரட்சகராகவும் எஜமான ராகவும் எவரும் இல்லை.

[9:115] எந்த மக்களையும் கடவுள் வழிநடத்திவிட்ட பின்னர் அவர்கள் எதனை எதிர்பார்க்க வேண்டும் என்பதை முதலில் சுட்டிக்காட்டாமல் அவர்களை வழிகேட்டில் அனுப்புவதில்லை. கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[9:117] கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும், ஊரைத் துறந்து வந்தவர்களையும் (முஹாஜிரீன்), கஷ்ட காலங்களில் அவரைப் பின்பற்றி அவர்களுக்கு அடைக்கலம் தந்து உபசரித்தவர்களையும் (அன்ஸார்), மீட்டுக் கொண்டார். அப்போது தான் அவர்களில் சிலருடைய இதயங்கள் கிட்டத்தட்டத் தடுமாறி விட்டன. ஆனால் அவர்களை அவர் மீட்டுக் கொண்டார், ஏனெனில் அவர்கள் பால் இரக்கம் கொண்டவராகவும், மிக்க கருணை யாளராகவும் அவர் இருக்கின்றார்.