குர்ஆன் 9:117 — இறுதியான எச்சரிக்கை
கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும், ஊரைத் துறந்து வந்தவர்களையும் (முஹாஜிரீன்), கஷ்ட காலங்களில் அவரைப் பின்பற்றி அவர்களுக்கு அடைக்கலம் தந்து உபசரித்தவர்களையும் (அன்ஸார்), மீட்டுக் கொண்டார். அப்போது தான் அவர்களில் சிலருடைய இதயங்கள் கிட்டத்தட்டத் தடுமாறி விட்டன. ஆனால் அவர்களை அவர் மீட்டுக் கொண்டார், ஏனெனில் அவர்கள் பால் இரக்கம் கொண்டவராகவும், மிக்க கருணை யாளராகவும் அவர் இருக்கின்றார்.
[9:116] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. அவர் வாழ்வையும் மரணத் தையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள்-ஐத் தவிர உங்களுக்கு ஓர் இரட்சகராகவும் எஜமான ராகவும் எவரும் இல்லை.
[9:118] பின்தங்கிய மூவரும் கூட (மீட்டுக் கொள்ளப் பட்டனர்). அவர்கள் தங்களைப் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் கிட்டத்தட்ட கைவிட்டு விடும் அளவிற்கு, விசாலமான இந்தப் பூமி அவர்களுக்கு மிகவும் நெருக்கடியானதாகி விட்டது. இறுதியில், கடவுள்-இடம் சென்றாலன்றி,அவரிடமிருந்து தப்பிப்பதற்கில்லை என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர். அவர்கள் வருந்தித் திருந்தும் பொருட்டு, அவர் பின்னர் அவர்களை மீட்டுக் கொண்டார். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.