குர்ஆன் 9:126 — இறுதியான எச்சரிக்கை
ஒவ்வொரு வருடமும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் கடினமான சோதனையில் கஷ்டப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? ஆயினும், அவர் கள் வருந்தித்திருந்த எப்பொழுதும் தவறி விடுகின்றனர், மேலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் தவறிவிடுகின்றனர் அல்லவா?
[9:125] தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி இருப்போரைப் பொறுத்தவரை, அது உண்மை யில் அவர்களுடைய அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே கூட்டியது, மேலும் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக மரணித்தார்கள்.
[9:127] ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்ட போதெல்லாம், அவர்களில் சிலர்: “உங்களை எவரேனும் ஒருவர் பார்க்கின்றாரோ? என்று கூறுவதைப் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் சென்று விட்டனர். இவ்விதமாக, கடவுள் அவர்களுடைய இதயங் களைத் திசை திருப்பி விட்டார், ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.