குர்ஆன் 9:18 — இறுதியான எச்சரிக்கை
கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கைக் கொண்டோரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) வழங்கி வருவோரும், மேலும் கடவுள்-ஐத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களும் மட்டுமே கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் நிச்சயமாக வழிகாட்டப்பட்டவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.
[9:17] தங்களுடைய நம்பமறுத்தலை ஒப்புக் கொண்டவர்களாக இருக்கும் நிலையில், இணைத்தெய்வ வழிபாடு செய்வோர் கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடாது. இவர்கள் தங்களுடைய காரியங்களைப் பயனற்றதாக ஆக்கிக் கொண்டனர், மேலும் அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கியிருப்பர்.
[9:19] புனிதப் பயணிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதை, மேலும் புனித மஸ்ஜிதைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதை, கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும், மேலும் கடவுள்-ன் பாதையில் பாடுபடுவதற்கும் மாற்றானது என எண்ணிக் கொண்டு விட்டீர்களா? கடவுள்-ன் பார்வையில் அவை சமமானவையல்ல. தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்து வதில்லை.