Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:19 — இறுதியான எச்சரிக்கை

புனிதப் பயணிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதை, மேலும் புனித மஸ்ஜிதைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதை, கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும், மேலும் கடவுள்-ன் பாதையில் பாடுபடுவதற்கும் மாற்றானது என எண்ணிக் கொண்டு விட்டீர்களா? கடவுள்-ன் பார்வையில் அவை சமமானவையல்ல. தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்து வதில்லை.

[9:18] கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கைக் கொண்டோரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) வழங்கி வருவோரும், மேலும் கடவுள்-ஐத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களும் மட்டுமே கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் நிச்சயமாக வழிகாட்டப்பட்டவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.

[9:20] நம்பிக்கை கொண்டு, மேலும் ஊரைவிட்டு வெளியேறி, மேலும் கடவுள் -ன் பாதையில் தங்களுடைய செல்வத்தையும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபடுபவர்கள், கடவுள்-ன் பார்வையில் மிகப்பெரிய அந்தஸ் துடையவர்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள்.