Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:20 — இறுதியான எச்சரிக்கை

நம்பிக்கை கொண்டு, மேலும் ஊரைவிட்டு வெளியேறி, மேலும் கடவுள் -ன் பாதையில் தங்களுடைய செல்வத்தையும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபடுபவர்கள், கடவுள்-ன் பார்வையில் மிகப்பெரிய அந்தஸ் துடையவர்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள்.

[9:19] புனிதப் பயணிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதை, மேலும் புனித மஸ்ஜிதைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதை, கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும், மேலும் கடவுள்-ன் பாதையில் பாடுபடுவதற்கும் மாற்றானது என எண்ணிக் கொண்டு விட்டீர்களா? கடவுள்-ன் பார்வையில் அவை சமமானவையல்ல. தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்து வதில்லை.

[9:21] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு நற்செய்தியளிக்கின்றார்: அவரிடமிருந்து கருணையும் மற்றும் அங்கீகாரமும், மேலும் தோட்டங்களும், அங்கே அவர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் பேரானந்தத்தில் மகிழ்ந் திருப்பார்கள்.