குர்ஆன் 9:28 — இறுதியான எச்சரிக்கை
நம்பிக்கை கொண்டோரே, இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் அசுத்தமாகி விட்டார் கள்; இவ்வருடத்திற்குப் பின்னர் அவர்கள் புனித மஸ்ஜிதை நெருங்க அனுமதிக்க வேண்டாம். வருமான இழப்பிற்கு நீங்கள் அஞ்சினால், கடவுள் அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப, அவருடைய வாழ்வாதாரங்களை உங்கள் மீது பொழிவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:27] இறுதியாக, தான் நாடுவோரைக் கடவுள் மீட்கின்றார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:29] கடவுள் மீதும், அன்றி இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்களை, அன்றி கடவுள்-ம் அவருடைய தூதரும் தடைசெய்த வற்றைத் தடுத்துக் கொள்ளாதவர்களை, அன்றி வேதத்தைப் பெற்றவர்களில் சத்தியமார்க்கத்தின்படி நடந்து கொள்ளாதவர் களை அவர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தகுந்த வரியைச் செலுத் தாதவர்களை எதிர்த்து நீங்கள் திரும்பவும் போரிட வேண்டும்.