Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:29 — இறுதியான எச்சரிக்கை

கடவுள் மீதும், அன்றி இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்களை, அன்றி கடவுள்-ம் அவருடைய தூதரும் தடைசெய்த வற்றைத் தடுத்துக் கொள்ளாதவர்களை, அன்றி வேதத்தைப் பெற்றவர்களில் சத்தியமார்க்கத்தின்படி நடந்து கொள்ளாதவர் களை அவர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தகுந்த வரியைச் செலுத் தாதவர்களை எதிர்த்து நீங்கள் திரும்பவும் போரிட வேண்டும்.

[9:28] நம்பிக்கை கொண்டோரே, இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் அசுத்தமாகி விட்டார் கள்; இவ்வருடத்திற்குப் பின்னர் அவர்கள் புனித மஸ்ஜிதை நெருங்க அனுமதிக்க வேண்டாம். வருமான இழப்பிற்கு நீங்கள் அஞ்சினால், கடவுள் அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப, அவருடைய வாழ்வாதாரங்களை உங்கள் மீது பொழிவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[9:30] யூதர்கள், “எஸ்ரா கடவுள்-ன் மகனாவார்” என்று கூறினார்கள், அதே சமயம் கிறிஸ்தவர் கள், “ இயேசு கடவுள்-ன் மகனாவார்!” என்று கூறினார்கள். இவையாவும் அவர்களின் வாய்களால் கூறப்படும் இறைநிந்தனைகளே யாகும். இவ்வாறாக, அவர்கள் கடந்தகாலத்திய நம்பமறுத்தவர்களின் இறை நிந்தனைகளுக்கு இணையாகவே செய்கின்றார்கள். கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார். அவர் கள் நிச்சயமாக விலகிச் சென்று விட்டனர்.