குர்ஆன் 9:30 — இறுதியான எச்சரிக்கை
யூதர்கள், “எஸ்ரா கடவுள்-ன் மகனாவார்” என்று கூறினார்கள், அதே சமயம் கிறிஸ்தவர் கள், “ இயேசு கடவுள்-ன் மகனாவார்!” என்று கூறினார்கள். இவையாவும் அவர்களின் வாய்களால் கூறப்படும் இறைநிந்தனைகளே யாகும். இவ்வாறாக, அவர்கள் கடந்தகாலத்திய நம்பமறுத்தவர்களின் இறை நிந்தனைகளுக்கு இணையாகவே செய்கின்றார்கள். கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார். அவர் கள் நிச்சயமாக விலகிச் சென்று விட்டனர்.
[9:29] கடவுள் மீதும், அன்றி இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்களை, அன்றி கடவுள்-ம் அவருடைய தூதரும் தடைசெய்த வற்றைத் தடுத்துக் கொள்ளாதவர்களை, அன்றி வேதத்தைப் பெற்றவர்களில் சத்தியமார்க்கத்தின்படி நடந்து கொள்ளாதவர் களை அவர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தகுந்த வரியைச் செலுத் தாதவர்களை எதிர்த்து நீங்கள் திரும்பவும் போரிட வேண்டும்.
[9:31] கடவுள்-க்கு பதிலாக, அவர்கள் தங்களுடைய சமயத் தலைவர்களையும், அறிஞர்களையும் இரட்சகர்களாக* அமைத்துக் கொண்டனர். மற்றவர்கள் மேரியின் மகனாகிய மெசையாஹ் விற்குத் தெய்வீகத் தன்மை கொடுத்தனர். அவர்கள் யாவரும் ஒரே தெய்வத்தை மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்றே கட்டளை யிடப்பட்டிருந்தனர். அவரையன்றி வேறு தெய்வம் இல்லை. அவர் துதிப்பிற்குரியவர், பங்குதாரர்கள் எவரையும் கொள்வதை விட்டும் உயர்வானவர்.