Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:34 — இறுதியான எச்சரிக்கை

நம்பிக்கை கொண்டோரே, ஏராளமான சமயத் தலைவர்களும் இன்னும் பிரச்சாரகர்களும் மக்களின் பணத்தை சட்ட விரோதமாக அபகரித்துக் கொள்கின்றனர், மேலும் கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டு கின்றனர். எவர்கள் தங்கத்தையும் வெள்ளி யையும் சேர்த்து வைத்துக் கொண்டு, மேலும் அவற்றைக் கடவுள்-ன் பாதையில் செலவு செய்யாமல் இருக்கின்றனரோ, அவர்களுக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.

[9:33] அவர்தான் தன்னுடைய தூதரை* வழிகாட்டலைக் கொண்டும், மேலும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தவர், மேலும் இணைத் தெய்வவழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கும்படி செய்வார்.

[9:35] அவர்களுடைய தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் கொதிக்க வைக்கப்பட்டுப், பின்னர் அவர்களுடைய நெற்றிகளையும், அவர் களுடைய ஓரங்களையும், மேலும் அவர் களுடைய முதுகுகளையும் எரிக்கப் பயன்படுத்தப்படும் அந்நாள் வரும்: “இதுதான் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வைத்தது, எனவே நீங்கள் சேர்த்து வைத்ததைச் சுவையுங்கள்.”