குர்ஆன் 9:35 — இறுதியான எச்சரிக்கை
அவர்களுடைய தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் கொதிக்க வைக்கப்பட்டுப், பின்னர் அவர்களுடைய நெற்றிகளையும், அவர் களுடைய ஓரங்களையும், மேலும் அவர் களுடைய முதுகுகளையும் எரிக்கப் பயன்படுத்தப்படும் அந்நாள் வரும்: “இதுதான் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வைத்தது, எனவே நீங்கள் சேர்த்து வைத்ததைச் சுவையுங்கள்.”
[9:34] நம்பிக்கை கொண்டோரே, ஏராளமான சமயத் தலைவர்களும் இன்னும் பிரச்சாரகர்களும் மக்களின் பணத்தை சட்ட விரோதமாக அபகரித்துக் கொள்கின்றனர், மேலும் கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டு கின்றனர். எவர்கள் தங்கத்தையும் வெள்ளி யையும் சேர்த்து வைத்துக் கொண்டு, மேலும் அவற்றைக் கடவுள்-ன் பாதையில் செலவு செய்யாமல் இருக்கின்றனரோ, அவர்களுக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.
[9:36] கடவுள்-ஐப் பொறுத்தவரை, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு* ஆகும். வானங் கள் மற்றும் பூமியை அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுள்-ன் சட்டமாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே முழுமையான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்கள் ஆன்மாக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. ஆயினும், அவர்கள் உங்களுக்கெதிராக முழுமையான போரை அறிவித்தால், (புனித மாதங்களின் போது கூட) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கெதிராக முழுமையான போரை நீங்களும் அறிவிக்கலாம், மேலும் கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.