Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:36 — இறுதியான எச்சரிக்கை

கடவுள்-ஐப் பொறுத்தவரை, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு* ஆகும். வானங் கள் மற்றும் பூமியை அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுள்-ன் சட்டமாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே முழுமையான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்கள் ஆன்மாக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. ஆயினும், அவர்கள் உங்களுக்கெதிராக முழுமையான போரை அறிவித்தால், (புனித மாதங்களின் போது கூட) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கெதிராக முழுமையான போரை நீங்களும் அறிவிக்கலாம், மேலும் கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[9:35] அவர்களுடைய தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் கொதிக்க வைக்கப்பட்டுப், பின்னர் அவர்களுடைய நெற்றிகளையும், அவர் களுடைய ஓரங்களையும், மேலும் அவர் களுடைய முதுகுகளையும் எரிக்கப் பயன்படுத்தப்படும் அந்நாள் வரும்: “இதுதான் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வைத்தது, எனவே நீங்கள் சேர்த்து வைத்ததைச் சுவையுங்கள்.”

[9:37] புனித மாதங்களை மாற்றிக் கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளம் ஆகும்; நம்பமறுத்துவிட்டவர்களின் வழிகேட்டை அது அதிகமாக்குகின்றது. கடவுள்-ஆல் புனித மாக்கி வைக்கப்பட்ட மாதங்களின் எண்ணிக் கையை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அவர்கள் புனிதமாதங்களையும் வழக்கமான மாதங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். கடவுள் புனிதமாக்கியதை இவ்வாறு அவர்கள் மீறுகின்றார்கள். அவர்களின் தீமையான காரியங்கள் அவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன.கடவுள் நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.