Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:37 — இறுதியான எச்சரிக்கை

புனித மாதங்களை மாற்றிக் கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளம் ஆகும்; நம்பமறுத்துவிட்டவர்களின் வழிகேட்டை அது அதிகமாக்குகின்றது. கடவுள்-ஆல் புனித மாக்கி வைக்கப்பட்ட மாதங்களின் எண்ணிக் கையை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அவர்கள் புனிதமாதங்களையும் வழக்கமான மாதங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். கடவுள் புனிதமாக்கியதை இவ்வாறு அவர்கள் மீறுகின்றார்கள். அவர்களின் தீமையான காரியங்கள் அவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன.கடவுள் நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.

[9:36] கடவுள்-ஐப் பொறுத்தவரை, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு* ஆகும். வானங் கள் மற்றும் பூமியை அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுள்-ன் சட்டமாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே முழுமையான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்கள் ஆன்மாக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. ஆயினும், அவர்கள் உங்களுக்கெதிராக முழுமையான போரை அறிவித்தால், (புனித மாதங்களின் போது கூட) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கெதிராக முழுமையான போரை நீங்களும் அறிவிக்கலாம், மேலும் கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[9:38] நம்பிக்கை கொண்டோரே, “கடவுள்-ன் பாதையில் தயாராகுங்கள்”, “என்று உங்களி டம் சொல்லப்பட்டால், ஏன் நீங்கள் பூமியுடன் கனமாக ஒட்டிக்கொண்டவர்களாக மாறிவிடு கின்றீர்கள்? மறுவுலகின் இடத்தில் இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? மறுவுலகுடன் ஒப்பிடுகையில், இவ்வுலகின் பொருட்கள், ஒன்றுமேயில்லை.