குர்ஆன் 9:38 — இறுதியான எச்சரிக்கை
நம்பிக்கை கொண்டோரே, “கடவுள்-ன் பாதையில் தயாராகுங்கள்”, “என்று உங்களி டம் சொல்லப்பட்டால், ஏன் நீங்கள் பூமியுடன் கனமாக ஒட்டிக்கொண்டவர்களாக மாறிவிடு கின்றீர்கள்? மறுவுலகின் இடத்தில் இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? மறுவுலகுடன் ஒப்பிடுகையில், இவ்வுலகின் பொருட்கள், ஒன்றுமேயில்லை.
[9:37] புனித மாதங்களை மாற்றிக் கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளம் ஆகும்; நம்பமறுத்துவிட்டவர்களின் வழிகேட்டை அது அதிகமாக்குகின்றது. கடவுள்-ஆல் புனித மாக்கி வைக்கப்பட்ட மாதங்களின் எண்ணிக் கையை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அவர்கள் புனிதமாதங்களையும் வழக்கமான மாதங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். கடவுள் புனிதமாக்கியதை இவ்வாறு அவர்கள் மீறுகின்றார்கள். அவர்களின் தீமையான காரியங்கள் அவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன.கடவுள் நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.
[9:39] நீங்கள் தயாராகாவிடில், உங்களை அவர் வலிமிகுந்த வேதனை செய்வார், மேலும் வேறு மக்களை உங்களின் இடத்தில் மாற்றியமைத்து விடுவார்; அவரை ஒருபோதும் உங்களால் சிறிதளவும் புண்படுத்த முடியாது. கடவுள் சர்வ சக்தியுடையவர்.