Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:39 — இறுதியான எச்சரிக்கை

நீங்கள் தயாராகாவிடில், உங்களை அவர் வலிமிகுந்த வேதனை செய்வார், மேலும் வேறு மக்களை உங்களின் இடத்தில் மாற்றியமைத்து விடுவார்; அவரை ஒருபோதும் உங்களால் சிறிதளவும் புண்படுத்த முடியாது. கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[9:38] நம்பிக்கை கொண்டோரே, “கடவுள்-ன் பாதையில் தயாராகுங்கள்”, “என்று உங்களி டம் சொல்லப்பட்டால், ஏன் நீங்கள் பூமியுடன் கனமாக ஒட்டிக்கொண்டவர்களாக மாறிவிடு கின்றீர்கள்? மறுவுலகின் இடத்தில் இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? மறுவுலகுடன் ஒப்பிடுகையில், இவ்வுலகின் பொருட்கள், ஒன்றுமேயில்லை.

[9:40] அவரை (தூதரை) நீங்கள் ஆதரிக்கத் தவறினால், கடவுள் ஏற்கனவே அவருக்கு ஆதரவளித்துள்ளார். இவ்விதமாக, நம்ப மறுப்பவர்கள் அவரைத் துரத்தியபோது, மேலும் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்தபோது, அவர் தன் தோழரிடம், “கவலை கொள்ளாதீர்; கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்று கூறினார். அப்போது கடவுள் அவர்மீது ஆறுதலையும், பாதுகாப்பையும் இறக்கி அனுப்பினார், மேலும் கண்களுக்குத் தெரியாத படையினரைக் கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். நம்ப மறுப்பவர்களின் கூற்றை அவர் கீழானதாக ஆக்கினார். கடவுள்-ன் வார்த்தை மேலான அரசாளும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.