குர்ஆன் 9:41 — இறுதியான எச்சரிக்கை
இலேசானதோ அல்லது பாரமானதோ, நீங்கள் உடனடியாக தயாராக வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையில் உங்களின் செல்வத்தையும் மற்றும் உங்களின் வாழ்வுகளையும் கொண்டு பாடுபடவேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
[9:40] அவரை (தூதரை) நீங்கள் ஆதரிக்கத் தவறினால், கடவுள் ஏற்கனவே அவருக்கு ஆதரவளித்துள்ளார். இவ்விதமாக, நம்ப மறுப்பவர்கள் அவரைத் துரத்தியபோது, மேலும் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்தபோது, அவர் தன் தோழரிடம், “கவலை கொள்ளாதீர்; கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்று கூறினார். அப்போது கடவுள் அவர்மீது ஆறுதலையும், பாதுகாப்பையும் இறக்கி அனுப்பினார், மேலும் கண்களுக்குத் தெரியாத படையினரைக் கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். நம்ப மறுப்பவர்களின் கூற்றை அவர் கீழானதாக ஆக்கினார். கடவுள்-ன் வார்த்தை மேலான அரசாளும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[9:42] ஒரு விரைவான பொருளாதார லாபமும், மேலும் ஒரு குறுகியதூரப் பயணமும் இருந்திருந்தால், அவர்கள் உம்மைப் பின் தொடர்ந்திருப்பார்கள். ஆனால் பாடுபடுவதென்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கின்றது. அவர்கள்: “எங்களால் முடிந்திருந்தால், நாங்களும் உங்களுடன் தயாராகியிருப்போம்” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொள்கின்றார்கள், மேலும் அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கடவுள் அறிகின்றார்.