Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:42 — இறுதியான எச்சரிக்கை

ஒரு விரைவான பொருளாதார லாபமும், மேலும் ஒரு குறுகியதூரப் பயணமும் இருந்திருந்தால், அவர்கள் உம்மைப் பின் தொடர்ந்திருப்பார்கள். ஆனால் பாடுபடுவதென்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கின்றது. அவர்கள்: “எங்களால் முடிந்திருந்தால், நாங்களும் உங்களுடன் தயாராகியிருப்போம்” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொள்கின்றார்கள், மேலும் அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கடவுள் அறிகின்றார்.

[9:41] இலேசானதோ அல்லது பாரமானதோ, நீங்கள் உடனடியாக தயாராக வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையில் உங்களின் செல்வத்தையும் மற்றும் உங்களின் வாழ்வுகளையும் கொண்டு பாடுபடவேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

[9:43] கடவுள் உம்மை மன்னித்து விட்டார்: பொய்யர் களிடமிருந்து உண்மையாளர்கள் யார் என்பதை உம்மால் அடையாளம் காண முடிவதற்கு முன்னால், (பின்னால் தங்கி விடுவதற்கு) அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?