குர்ஆன் 9:43 — இறுதியான எச்சரிக்கை
கடவுள் உம்மை மன்னித்து விட்டார்: பொய்யர் களிடமிருந்து உண்மையாளர்கள் யார் என்பதை உம்மால் அடையாளம் காண முடிவதற்கு முன்னால், (பின்னால் தங்கி விடுவதற்கு) அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?
[9:42] ஒரு விரைவான பொருளாதார லாபமும், மேலும் ஒரு குறுகியதூரப் பயணமும் இருந்திருந்தால், அவர்கள் உம்மைப் பின் தொடர்ந்திருப்பார்கள். ஆனால் பாடுபடுவதென்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கின்றது. அவர்கள்: “எங்களால் முடிந்திருந்தால், நாங்களும் உங்களுடன் தயாராகியிருப்போம்” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொள்கின்றார்கள், மேலும் அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கடவுள் அறிகின்றார்.
[9:44] கடவுள்-ன் மீதும் இறுதிநாளின் மீதும் மெய் யாகவே நம்பிக்கை கொண்டவர்கள், தங்களு டைய செல்வத்தையும், தங்களுடைய வாழ்வு களையும் கொண்டு பாடுபடும் வாய்ப்பைத் தவிர்த்திட உம்முடைய அனுமதியைக் கேட்க மாட்டார்கள். கடவுள் நன்னெறியாளர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.