குர்ஆன் 9:46 — இறுதியான எச்சரிக்கை
மெய்யாகவே அவர்கள் தயாராகி விட விரும்பியிருந்தார்களானால், அதற்காக அவர்கள் முழுமையாக தயார் செய்திருப்பார்கள். ஆனால் கடவுள் அவர்களுடைய பங்களிப்பை விரும்ப வில்லை, ஆதலால் அவர்களை ஊக்கம் இழக்கச் செய்தார்; “ பின் தங்குபவர்களுடன் பின்னாலேயே தங்கி விடுங்கள்,” என்று அவர்களிடம் சொல்லப் பட்டது.
[9:45] கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் மெய் யாகவே, நம்பிக்கை கொள்ளாத மக்கள்தான் விலக்களிக்கப்பட வேண்டுமென விரும்புவார்கள். அவர்களுடைய இதயங்கள் சந்தேகம் நிரம்பி யவை. மேலும் அவர்களுடைய சந்தேகங்கள் தான் அவர்களைத் தடுமாறச் செய்கின்றன.
[9:47] உங்களோடு அவர்கள் தயாராகியிருந்தால், அவர்கள் குழப்பத்தை உண்டாக்கியிருப்பார்கள், மேலும் உங்கள் மத்தியில் சச்சரவுகளையும் பிரிவினைகளையும் உண்டாக்கியிருப்பார்கள். உங்களில் சிலர் அவர்களுக்கு செவிசாய்க்கக் கூடியவர்களாக இருந்தீர்கள். கடவுள் வரம்பு மீறுபவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.