Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:47 — இறுதியான எச்சரிக்கை

உங்களோடு அவர்கள் தயாராகியிருந்தால், அவர்கள் குழப்பத்தை உண்டாக்கியிருப்பார்கள், மேலும் உங்கள் மத்தியில் சச்சரவுகளையும் பிரிவினைகளையும் உண்டாக்கியிருப்பார்கள். உங்களில் சிலர் அவர்களுக்கு செவிசாய்க்கக் கூடியவர்களாக இருந்தீர்கள். கடவுள் வரம்பு மீறுபவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[9:46] மெய்யாகவே அவர்கள் தயாராகி விட விரும்பியிருந்தார்களானால், அதற்காக அவர்கள் முழுமையாக தயார் செய்திருப்பார்கள். ஆனால் கடவுள் அவர்களுடைய பங்களிப்பை விரும்ப வில்லை, ஆதலால் அவர்களை ஊக்கம் இழக்கச் செய்தார்; “ பின் தங்குபவர்களுடன் பின்னாலேயே தங்கி விடுங்கள்,” என்று அவர்களிடம் சொல்லப் பட்டது.

[9:48] கடந்த காலத்திலும் அவர்கள் உங்கள் மத்தியில் குழப்பத்தைப் பரப்ப நாடினார்கள், மேலும் உங்களுக்காக விஷயங்களை குழப்பவும் செய்தார்கள். ஆயினும், இறுதியில் சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் வெறுத்தபோதிலும், கடவுள்-ன் திட்டம் நிறைவேற்றப்பட்டது.